தொடர்புடைய செய்திகள்
- கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட முக ஸ்டாலின்: வைரல் புகைப்படம்!
- பொய்யும் புரட்டும் கலந்த முழு சந்தர்ப்பவாதி: வைகோவை கடுமையாக விமர்சனம் செய்த நடிகை
- மதிமுகவுக்கு முடிவான தொகுதி பங்கீடு: ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வைகோ
- உதயநிதி ஸ்டாலினை நிற்கவைத்து நேர்காணல் செய்த திமுகவினர்!
- மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக!
மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை? வெளியான பட்டியல்!
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி முடிந்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஒருசில கட்சிகள் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் தற்போது மதிமுகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அந்த தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளன.
இந்நிலையில் மதிமுக போட்டியிட உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. மதிமுக சார்பில் 4 பொதுத் தொகுதிகளிலும் 2 தனித்தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. சாத்தூர், கோவை வடக்கு, மதுரை தெற்கு, அரியலூர் ஆகிய 4 பொது தொகுதிகளிலும் மதுராந்தகம் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய தனித்தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.
