வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (18:34 IST)

தபால் வாக்குக்கு எதிரான திமுக வழக்கு… தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்திருந்தது.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சில சலுகைகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இதன் மூலம் தேர்தலில் குளறுபடிகள் நடக்கலாம் என திமுக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இதற்கெதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.