திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ஏப்ரல் 17ஆம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி சமீபத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழகம் புதுவை கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் ஏப்ரல் 17ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ஆந்திராவின் திருப்பதி மக்களவை தொகுதி மற்றும் கர்நாடக மாநிலம் பெல்காம் மக்களவை தொகுதி காலியாக இருப்பதை அடுத்து இந்த இரண்டு தொகுதிகளுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் 11 மாநிலங்களில் 14 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதை அடுத்து அந்த தொகுதிகளுக்கும் ஏப்ரல் 17ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
குஜராத், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மிசோரம், ராஜஸ்தான், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் உத்தரகண்ட்ஆகிய மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளும் மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது