துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள் வாக்களித்து முடித்த பிரபலங்கள் !!
வாக்கு பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன் மூன்று மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில், வாக்கு பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். இதுவரை,
காரைக்குடி கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை பதிவு செய்தார்.
தி.நகர் வாக்குச்சாவடியில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி வாக்களித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மகள்களுடன் வாக்கை பதிவு செய்தார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
நடிகர் அஜித், அவரது மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களித்தார்.
திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார்.
பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வாக்கு பதிவு செய்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் முக ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடலூர் மாவட்டத்தில் வாக்கினைப் பதிவு செய்தார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் வாக்களித்து விட்டு புதுச்சேரி புறப்பட்டார்.