திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா !
திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவுகிறது. இந்நிலையில், நாளை இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு தேனி பரப்புரையில் ஈடுபட்ட போது அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. அதனைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளார்.