1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  4. Election not started in Omalur

வாக்குப்பதிவு துவங்கவில்லை... ஓமலூர் தொகுதி மக்கள் காத்திருப்பு!

TN Assembly Election 2021
சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் பல இடங்களில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. 

 
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன் மூன்று மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. 
 
தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதாகவும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
ஆனால், சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் பல இடங்களில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. 
அடுத்த கட்டுரையில்
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்த நடிகர் அஜித்!