தனுசு - மாசி மாத பலன்கள்

Last Modified வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:20 IST)
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரக நிலை: ராசியில் சுக்ரன், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய  ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
தன்னலம் கருதாமல் பிறருக்காக பாடுபடும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை  வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள்.  அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.
 
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது  அதைப் பற்றி விவாதிப்பதையோ  தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை  தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
 
குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை.
 
பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.
 
மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில்  உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும்.
 
அரசியல் துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து  முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.
 
மூலம்
 
இந்த மாதம் அதிகநேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும். எதிர்பாராத  இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெண்கள் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை  ஏற்படுத்தும்.
 
பூராடம்: 
 
இந்த மாதம் திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். தாய் வழி உற்றார்-உறவினர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிவரும்.
 
உத்திராடம் 1ம் பாதம்
 
இந்த மாதம் எதிர்பார்க்கும் பணவரவுகளும் தாமதப்படுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடைகள் நிலவும். பொதுப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும்.
 
பரிகாரம்: குருபகவானை வியாழக்கிழமையில் வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். 
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
 
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச்10, 11, 12
 
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி18, 19.


இதில் மேலும் படிக்கவும் :