சிம்மம் - மாசி மாத பலன்கள்

Last Modified வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:00 IST)
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - கிரக நிலை: சுகஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன  சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
உறவுக்கு கட்டுப்படும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.  சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து  அதிகரிக்கும்.
 
தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம்.  உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து  செல்வது நன்மை தரும்.
 
குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல்  ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
 
பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை  இருக்கும்.
 
மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரி யமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற  கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம்  தொடர்பான போட்டிகளும் நீங்கும்.
 
அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
 
மகம்:
 
இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன்  செயல்படுவது நல்லது. எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம்.
 
பூரம்:
 
இந்த மாதம் பொருளாதார ரீதியாக முன்னேற்றமான பலன்கள் உண்டாகும்.  எதிர்பாராத திடீர் தனசேர்க்கைகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் விலகி கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை  பாராட்டுவார்கள்.
 
உத்திரம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். பூர்வீக சொத்துகளால்  கூடுதல் லாபம் உண்டாகும். வீடு, மனை, பூமி வாங்கும் யோகம் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
 
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:  ஞாயிறு, வெள்ளி
 
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி28; மார்ச்1, 2
 
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 8, 9.


இதில் மேலும் படிக்கவும் :