கன்னி - மாசி மாத பலன்கள்

Last Modified வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:06 IST)
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரக நிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுகஸ்தானத்தில் சுக்ரன், சனி  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
கற்பனை குதிரைகளை ஓட விடும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து  அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம்  நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும்.  தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.
 
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில்  விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல்  அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
 
குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து  செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.
 
பெண்களுக்கு கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.
 
மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
 
கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள்  குறையும்.
 
அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித்  தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.
 
உத்திரம் 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத  சூழ்நிலைகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவற்ற நிலைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும்.
 
அஸ்தம்:
 
இந்த மாதம் எதிர்பாராத பயணங்கள் உண்டாகி தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமுடன்  செயல்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குடும்பம், பொருளாதாரநிலை விசயத்தில் அடுத்தவர் தலையீடு வேண்டாம்.
 
சித்திரை 1, 2, பாதம்:
 
இந்த மாதம் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களால் ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும்,  புத்திரர்களால் மனநிம்மதியற்ற நிலையும் உண்டாகும்.
 
பரிகாரம்: பெருமாளை வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
 
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 3, 4
 
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச்10, 11, 12.


இதில் மேலும் படிக்கவும் :