விருச்சிகம் - மாசி மாத பலன்கள்

Last Modified வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:14 IST)
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை) - கிரக நிலை: ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுகஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
எதிர்பாராத செலவால் திக்கு முக்காடும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண்குழப்பம் ஏற்படும். எதைப் பற்றியும்  அதிகம் யோசித்து  மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக  உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான  அவச்சொல் வாங்க நேரிடும்.
 
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில்  மும்முரமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து  திருப்தி தரும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில்  தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து  நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
 
பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.
 
மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான  வேலைகள் முடிவுக்கு வந்து
 
சேரும்.
 
அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக  பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
 
விசாகம் 4ம் பாதம்:
 
இந்த மாதம் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்வது  நல்லது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம்.
 
அனுஷம்:
 
இந்த மாதம் தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வீண் அலைச்சல்கள்  ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை  அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவரச்செய்து முடிக்க முடியும்.
 
கேட்டை:
 
இந்த மாதம் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து  கொள்வதன்மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே  பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
 
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
 
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 8, 9
 
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி15, 16, 17.


இதில் மேலும் படிக்கவும் :