வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சிரி
  3. ஜோக்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (19:22 IST)

"அப்பாஸுக்கும் லொஸ்லியாவுக்கும் இப்படி ஒரு வேவ்லென்த்தா"!

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் தனது குறும்பு தனமான செய்கையாலும்,  குழந்தைத்தனமான பேச்சாலும் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த போட்டியாளர் லொஸ்லியா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது சுயரூபம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்ததால் அது அத்தனையும் நடிப்பு என்பது வெட்டவெளிச்சமானது. 


 
மேலும் கவினுடன் கடலை போட்டுவந்ததால் அவரை ரசிகர்களே வெறுக்க தொடங்கினர். சமீபகாலமாக லொஸ்லியவை மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டலடித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது  பேஸ் ஆப் மூலம் லாஸ்லியாவின் புகைப்படத்தை ஆண் தோற்றத்திற்கு மாற்றியபோது நடிகர் அப்பாஸ் முகச் சாயல் வந்துள்ளது. 


 
தற்போது அந்தப் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் தயாரித்துள்ள நெட்டிசன்கள் "அப்பாஸுக்கு பெண் வேடம் போட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பியிருக்கிறார்கள் என மீம்ஸை உருவாக்கி இஷ்டத்துக்கு கிண்டலடித்து வருவதோடு , கவினுக்கு இது தெரியாமல் தான் அவ பின்னாடி சுத்திட்டு இருக்கிறான். இது மட்டும் தெரிந்தால் அவ்ளோவ் தான் என்றெல்லாம் கலாய்த்து வருகின்றனர்.