1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Tabu and Nagarjuna Reunite After 28 Years in King 100: First Look Revealed

28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரபல நடிகருட தபு: 55வது பிறந்த நாளில் மாஸ் அப்டேட்!

தபு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமாக உருவாகி வருகிறது 'கிங் 100'. இப்படத்தை ரா கார்த்திக் இயக்கி வருகிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
 
இப்படத்தில் பிரபல நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை தபுவின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் அவரது கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் 'மஹாந்தி ஜான்சி ராணி' என்ற சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் தபு நடிக்கிறார்.
 
நாகார்ஜுனா மற்றும் தபு ஆகியோர் 'நின்னே பெல்லாடதா' (1996), 'ஆவிட மா ஆவிட' (1998) போன்ற வெற்றிகரமான படங்களுக்குப் பிறகு, சுமார் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் ஒன்றிணைகின்றனர். தபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டரைப் பகிர்ந்த நாகார்ஜுனா, "இந்த முறை இது காதல் அல்ல..." எனக் குறிப்பிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.
 
இத்திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
எங்கப்பா ஒரு கங்காணி!.. வெள்ளக்காரன் கொடுத்த 25 ஏக்கர் நிலம்.. கங்கை அமரன் பேட்டி