சீன் பட புரமோஷ்ன் - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சூர்யா
சூர்யாவுக்கு கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என தொடர்ந்து ஹிட் படங்கள் அமைந்துவரும் நிலையில் அடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
இந்த படம் தொடர்பான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். கலகலப்பான, ஜாலியான ஒரு போலீஸ் அதிகாரியாக சூர்யா இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் நடைபெற்றது. இந்நிலையில்தான் இன்று கேரள மாநிலம் கொச்சினில் நடைபெறும் சீன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக இந்த நிகழ்ச்சியை தவிர்த்துள்ள சூர்யா அதற்காக தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.