1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. rajinikanth reduced the hotel price to kalaipuli thanu

12.5 லட்சம் எதுக்கு?.. 95 ஆயிரம் போதும்! - தாணுவுக்கு செலவு வைக்காத ரஜினி

thanu rajini
வாழ்க்கையில் அடிபட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மேலே வந்தவர்தான் ரஜினிகாந்த். அதனால் அவர் தலையில் எப்போதும் ஈகோ இல்லை. இப்போதும் அவர் எளிமையாகவே இருக்கிறார் என அவருடன் நடிக்கும் எல்லோரும் பேசுகிறார்கள்.

சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் கூட மற்ற நடிகர்களை போல அவர் பந்தா செய்வதில்லை. இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டுக் கொண்டு நடிக்கிறார் என பலரும் சொல்கிறார்கள். இந்நிலையில்தான், ரஜினியை வைத்து கபாலி உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து கலைப்புலி தாணு ஒரு முக்கிய தகவலை ஊடகம் ஒன்றில் சொல்லியிருக்கிறார்..

கபாலி சூட்டிங் நடந்தபோது தாய்லாந்தில் ரஜினி சாருக்காக ரூம் புக் பண்ணினேன். அதுதான் அங்கே பெரிய ஹோட்டல். ரஜினி சார் வந்தது தெரிஞ்சதும் அந்த ஊர் இளவரசி ரஜினி சாரை பார்க்க வரேன்னு சொன்னாங்க. அதனால ஒரு ப்ளோர் புக் பண்ணிட்டேன். ஒருநாள் வாடகை மட்டும் ரூ.12.5 லட்சம். ரஜினி சார் அங்க வந்து பார்த்துட்டு எனக்கு சிங்கிள் ரூம் மட்டும் போதும்.. எதுக்கு இவ்வளவு செலவு? நான் எங்க இருந்தாலும் இளவரசி வந்து என்னை பார்க்க போறாங்க அப்படின்னு சொல்லிட்டு ஒரே ஒரு ரூம் 95 ஆயிரம் ரூபாய்ல புக் பண்ணி அதுல தங்கினார்.
தயாரிப்பாளருக்கு எந்த அளவுக்கு செலவு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு ரஜினி சிக்கனமாக இருப்பார்’ என கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரபல நடிகருட தபு: 55வது பிறந்த நாளில் மாஸ் அப்டேட்!