ஹாலிவுட் ரேஞ்சிற்கு அனல் பறக்கும் "வார்" ட்ரெய்லர்!

Last Updated: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:11 IST)
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் வார் படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.


 
பாலிவுட் சினிமாவின் மிகசிறந்த நடிகர்களுள் ஒருவரான ஹிருத்திக் ரோஷன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான,  விசித்திரமான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய சினிமாவை உலகெங்கும் உள்ள ரசிகர்களை திரும்பி பார்க்க செய்திடுவார். அந்தவகையில் அவரது நடிப்பில் வெளியான க்ரிஷ் , தூம், பாங் பாங் , அக்னீபாத் , இப்படி அவரது நடிப்பில் வெளியாகிய ராளமான ஆக்ஷன் படங்கள் சூப்பர் அடித்துள்ளது. 
 
அந்தவகையில் தற்போது ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகிவரும் "வார்"  படத்தில் நடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தை ஆதித்ய சோப்ரா தயாரித்துள்ளார். ஹிருத்திக் ரோஷனுடன் நடிகர் டைகர் ஷராஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்திருந்த வாணி கபூர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் 2 ம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதையடுத்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்கவைத்துள்ளது. ஆக்ஷன்,  ஸ்டண்ட், எமோஷன் , என அத்தனை அம்சங்ககளையும் உள்ளடக்கி உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியான ஒரு சில மணி நேரத்திலே ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.  


இதில் மேலும் படிக்கவும் :