வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: புதன், 4 மார்ச் 2026 (14:25 IST)

பட்டையை கிளப்பும் வசூல் தாய்கிழவி 5ம் நாள் வசூல் நிலவரம்

பட்டையை கிளப்பும் வசூல் தாய்கிழவி 5ம் நாள் வசூல் நிலவரம்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான 'தாய் கிழவி'  திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. பிப்ரவரி 27, 2026 அன்று வெளியான இப்படம், அதன் 5-வது நாள் (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகிறது.சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்த படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.
 
இப்படத்தின் 5-வது நாள் வசூல் குறித்த விரிவான தகவல்கள் இதோ:
 
 
வார இறுதி நாட்களைத் தாண்டி வார நாட்களிலும் இப்படம் நிலையான வசூலைப் பெற்று வருகிறது. 5 நாட்கள் முடிவில் இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் ₹1.60 கோடி முதல் ₹2.40 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தெரிகிறது  மொத்த வசூல் (5 நாட்கள்): உலகளவில் 5 நாட்களின் முடிவில் இப்படம் ₹25 கோடி முதல் ₹28 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் ரூ. 19 கோடிவரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
சுமார் ₹12 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், வெளியான 3 நாட்களிலேயே லாபகட்டத்தை எட்டிவிட்டது.