யஷ் நடிப்பில் உருவான 'டாக்ஸிக்' ரிலீஸ் தேதி மாற்றம்.. இதற்கும் போர் தான் காரணமா?
கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவான 'டாக்ஸிக்' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 19-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம், தற்போது நிலவும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால், ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' படத்துடன் ஏற்படவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களின் நலன் கருதியே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், ஜூன் மாதம் இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.
Edited by Siva