புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (19:08 IST)

மிரளவைக்கும் அருண் விஜய்யின் ‘தடம்’ ட்ரெய்லர் 2

வித்தியாசமான கதையாம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனெக்கென தனி இடத்தைத் தக்க வைத்திருப்பவர் நடிகர் அருண்விஜய். 


 
இவர் அஜித்துடன் `என்னை அறிந்தால்' படத்தில் நடித்த நெகட்டிவ் கேரக்டர் பலராலும் பாராட்டு பெற்று  சினிமா உலகில் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. 
 
இந்தநிலையில் தற்போது அருண்விஜய் `தடம்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் ஒரு உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. 
 
அருண்விஜய், மகிழ்திருமேனி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படமான  `தடம்' க்ரைம் த்ரில்லர் பணியில் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 
‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அருண்ராஜ் மிரட்டலாக இசையமைத்துள்ளார். படத்தை வருகிற மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
இப்படத்தின் முதல் ட்ரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது மீண்டும்  இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலர் இணயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
இந்த ட்ரைலரை பிரபல நடிகர் ‘ஜெயம்’ ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனபது குறிப்பிடத்தக்கது.