பாக்ஸரில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங்!

VM| Last Modified திங்கள், 11 பிப்ரவரி 2019 (12:26 IST)
தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய், குத்து சண்டை வீரராக  பாக்ஸர் என்ற படத்தில் நடிக்கிறார். பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக், இயக்குகிறார்.


 
இந்தப் படத்தில் நடிப்பதற்காக மலேசியா மற்றும் வியட்நாமில்  அருண் விஜய் குத்து சண்டை பயிற்சி பெற்று வருகிறார். இந்த படத்தின் சண்டைப் பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன், அருண் விஜய்க்குப் பயிற்சி அளிக்கிறார். வரும்  மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். லண்டனைச் சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன், ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் தேசிய விருது வென்ற ரித்திகா சிங் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
ரியல் குத்து சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா  சிங் ஏற்கனவே இறுதி சுற்று என்ற குத்து சண்டை தொடர்பான படத்தில் நடித்திருந்தார். 


இதில் மேலும் படிக்கவும் :