வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

Cellphone usage in toilet
பெங்களூருவில் 32 வயதுடைய பிரபல கன்னட நடிகை ஒருவரை பாத்ரூமில் ரகசிய படம் எடுத்ததாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிப்ரவரி 6 முதல் 13ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், பெங்களூருவில் உள்ள உள்விளையாட்டு அரங்கம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னட நடிகை ஒருவர் பங்கேற்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பெண்களுக்கான கழிவறையை பயன்படுத்திய நடிகையை, மர்ம நபர் ஒருவர் ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்துள்ளார்.
 
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் மூலம் நடிகையின் தோழிக்கு அனுப்பி, அது நடிகையின் கணக்கு என தவறாக கருதி மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பல தனிப்பட்ட வீடியோக்களை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என்றும், இல்லையெனில் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம் என்றும் அந்த மர்ம நபர் நடிகையை மிரட்டியுள்ளார். 
 
தோழியின் மூலம் இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகை, பெங்களூரு சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இன்ஸ்டாகிராம் கணக்கின் ஐபி முகவரியை வைத்து குற்றவாளியை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
Edited by Siva