செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (19:22 IST)

இரண்டு விஜய்கள் இணையும் படத்தின் டைட்டிலை அறிவித்த கமல்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களான விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டிலை சற்றுமுன்னர் உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மூடர் கூடம்' படத்தின் இயக்குனர் நவீன் இயக்கும் இந்த படத்திற்கு 'அக்னி சிறகுகள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இதே டைட்டிலில்தான் ஒரு புத்தகம் எழுதினார் என்பதும் அந்த புத்தகம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி, அருண்விஜய் ஆகியோர்களுடன் இந்த படத்தில் , பிரகாஷ்ராஜ், நாசர், ஜெகபதிபாபு , ஷாலினி  ரெட்டி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். 'மூடர் கூடம்' படத்திற்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்

இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' மற்றும் பிரபுதேவா நடித்து வரும் 'சார்லி சாப்லின்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது