ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 நவம்பர் 2018 (08:34 IST)

பிறந்தநாளன்று அருண்விஜய் செய்த வேலை...

நடிகர் அருண்விஜய் தனது பிறந்தநாளன்று குழந்தைகள் ஆசிரமத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளித்து அவர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
 
நடிகர் விஜயகுமாரின் மகனும் நடிகருமான அருண்விஜய் தமிழ்த் திரையுலகில் தற்பொழுது வேகமாக வளர்ந்துவரும் நடிகராவார். குறிப்பிட்ட கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.
 
என்னை அறிந்தால் மட்டும் செக்க சிவந்த வானம் படத்தில் அவரது நடிப்புத் திறன் பிரமாதம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று அருண்விஜய் தனது பிறந்த நாளை உதவும் கரங்கள் அமைப்பில் இருக்கும் சிறுமிகள், மாணவிகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.