வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: செவ்வாய், 17 பிப்ரவரி 2026 (13:46 IST)

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

rajini vijay
விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் வில்லனாக நடிக்கத் தொடங்கி ஒரே படத்தில் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மன்சூர் அலிகான். மன்சூர் அலிகானின் உடல் மொழியும், அவர் வசனம் பேசும் ஸ்டைலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. எனவே ஏராளமான படங்களில் இவர் நடித்தார். ஒரு சில படங்களை அவரை இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்..

ஒருபக்கம் சமூக அரசியலையும் மன்சூர் அலிகான் தொடர்ந்து பேசி வருகிறார். தனியாக கட்சி தொடங்கி சில தேர்தல்களிலும் போட்டியிட்டார்.. அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்குவார், வழக்குகளை சந்திப்பார்.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் ‘நான் விஜயுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன்.. ஆனால் அவருக்கு ஆதரவாக நான் கருத்தை தெரிவித்த போதும் கூட அவர் என்னை சந்திக்க மறுத்துவிட்டார்.. ஆனால் ரஜினியுடன் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறேன்.. ஆனால் இப்போது நான் அவரிடம் பேசினாலும் உடனே என்னை சந்திக்க கூப்பிடுவார்.. இதுதான் இவர்கள் இரண்டு பேருக்கும் வித்தியாசம்’ என கூறியிருக்கிறார்..