திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:50 IST)

விஜய் சேதுபதியை எச்சரித்த சிம்பு ரசிகர்கள்... என்ன காரணம்?

செக்கசிவந்த வானம் படத்தில் விஜய்சேதுபதி சிம்புவை சுட்டுக் கொன்றதற்கு, சிம்பு ரசிகர்கள் விஜய்சேதுபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செக்க சிவந்த வானம் படம் அக்டோபர் 27ம் தேதி வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதிராவ் உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
நீண்ட வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் தனது பழைய பாணியில் செம் ஹிட் படத்தை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் சிம்பு ரசிகர்கள், ஒரு பக்கம் விஜய் சேதுபதி ரசிகர்கள் என இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 
இந்நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் விஜய் சேதுபதி, எத்தி கேரக்டரில் நடித்த சிம்புவை சுட்டுக்கொல்வது போல காட்சி இடம்பெற்றுள்ளது.
இதனால் கோபமடைந்த சிம்பு ரசிகர்கள், எங்களுக்கு ஒன்னுனா விட்ருவன், ஆனால் எங்க எஸ்.டி.ஆர் க்கு ஒன்னுன்னா எவனா இருந்தாலும் வேற மாதிரி ஆயிடும் என விஜய்சேதுபதிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.