வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (20:00 IST)

இதோ பாருண்ணா...’செக்க சிவந்த வானம்’ படத்தோட பாக்ஸ் ஆபிஸ் வசூல் அப்டேட்...

மணிரத்தினம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளோடு கடந்த வருடம் வெளிவந்த படம் "காற்று வெளியிடை"  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்தது. காற்றுவெளியிடையின் தோல்வியில் இருந்து தன் தனிப்பெரும் அடையாளத்தை மீண்டும் நிரூபித்து காட்டி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.
செக்க சிவந்த வானம் ஒரு கமர்சியல் படம். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த படம் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே இதில் நடித்துள்ள  நான்கு   மிகப்பெரிய நடிகர்கள் தான், விஜய் சேதுபதி, அரவிந்த்ஸ்வாமி அருண் விஜய், சிம்பு மற்றும் ஜோதிகா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மூன்று உடன்பிறப்புகளுக்கு இடையிலான  போராட்டமே இந்த படத்தின் மையக் கரு.
 
 
செக்க சிவந்த வானம் (CCVT)  காட்பாதர் பாணியிலான Gangster கதையாகும். இந்தப்படம்  தமிழ்நாட்டின் தொடக்க நாளில் ரூ. 8 கோடியைத் தொட்டது. சென்னையில் மட்டும், முதல் நாளில் ரூ. 80 லட்சம் சேகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகர்ப்புற பகுதிகளில் பிரமிக்கத்தக்க முன்பதிவு பதிவுகளை பதிவு செய்துள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்த படம் அமெரிக்க டாலருக்கு 2.24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, மேலும் அங்கு ஒரு மில்லியன் கிளப்பில் நுழையவும் இருக்கிறது.
 
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் எடிட்டர் ஏ.கிருஷ்ண பிரசாத் ஆகியோரை உள்ளடக்கியது மட்டுமல்லாமல் முக்கிய தொழில்நுட்பக் குழுவையும் கொண்டுள்ளது.
 
முதல்நாளில்   ₹8.05 கோடி + இரண்டாம் நாளில்  ₹6.15 கோடி ,மூன்றாம் நாளில்  ₹7.50 கோடி என மொத்தம் ₹21.70 கோடி என்ற அபார வசூல் பெற்றுள்ளது. 
 
சி.சி.வி., ஆஸ்திரேலியாவில், 170.682 டாலர் (88.07 லட்சம்), இங்கிலாந்தில் 63,895 (ரூ. 60.40 லட்சம்), நியூஸிலாந்தில் 54 ஆயிரத்து 1111 ரூபாய் (26.12 லட்சம்), ஆஸ்திரேலியாவில் 592,319 டாலர்களை குவித்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர் தாரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.