வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2022 (15:36 IST)

''உலக அதிசயம் அருகில் குந்தவை'' - த்ரிஷாவின் வைரல் புகைப்படம்

thrisha
வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள  நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை திரிஷா. இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக சினிமாவில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், மணிரத்னம் இயக்கத்தில், உருவான பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் இணைந்து குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா   நடித்திருந்தார்.

அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஐரோப்பா சுற்றுப்பயணம் செய்ததுள்ள திரிஷா, தன் சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.

இத்தாலி  நாட்டின் பீசா நகரில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், அதன் அருகே நின்று திரிஷா எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj