இத்தாலியின் புதிய பிரதமராக ஜியார்ஜியா மெலோனி தேர்வு ! பிரதமர் மோடி வாழ்த்து
இத்தாலி தேசத்தில், ஜியார்ஜியா மெலோனி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இத்தாலி நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்தாலியின் சகோதர்கள் கட்சியின் சார்பில், போட்டியிட்ட ஜியார்ஜியா மெலோனி புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், இத்தாலியின் பிரதமராகப் பதவியேற்கும் முதல் பெண் ஆவார். உலகில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலியாவின் நடந்த பிரதமர் தேர்தலை அனைத்து நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில், உலகத் தலைவர்கள் புதிய பிரதமர் ஜியார்ஜியாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தன் டுவிட்டர் பகக்த்தில், பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள், இரு நாட்டு உறவுகள் வலுப்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.