1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Devara 2 almost shelved director Korattaala siva in Trouble

கைவிடப்பட்டதா ஜூனியர் NTR-ன் தேவரா 2… அடுத்த கதைக்கு நகர்ந்த இயக்குனர்!

கொரட்டாலா சிவா
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரின்  நடிப்பில் ‘தேவரா முதல் பாகம்’கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பின் என் டி ஆர் நடித்த படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

ஜூனியர் என் டி ஆர் நடித்த ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்குப் பிறகு இந்த படம் ரிலீஸான நிலையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் படுதோல்வியாக அமைந்தது. படம் ரிலீஸாகி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் சேட்டிலைட் வியாபாரம் நடக்கவில்லை. இதனால் அதன் இரண்டாம் பாகம் தொடங்கப்படாது என்றே கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் படத்தயாரிப்பு நிறுவனம் கண்டிப்பாக ‘தேவரா 2’ உருவாகும் என அறிவித்தது. ஆனால் இப்போது ஜூனியர் என் டி ஆரும் அந்த படத்தில் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் தயாரிப்பு நிறுவனம் அதை இயக்குனர் கொரட்டாலா சிவாவிடம் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!