செம்பருத்தி சீரியல்; பார்வதியை முந்துவாரா ஐஸ்வர்யா?
முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி என்ற தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்.
ஆயிரம் நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்நிலையில், நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. இது இத்தொடருக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இத்தொடருக்கு கதை கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் கதாப்பாத்திரங்கள் மாற்றப்படுகிறார்களோ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், செம்பருத்தி தொடரில் வரும் கதாப்பாத்திரங்களில் பார்வதி- ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் இடையேயான அதிகாரப் போட்டியில் ரசிகர்கள் சலிப்படைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.