திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (16:37 IST)

பிக்பாஸில் கலந்துகொள்கிறாரா கார்த்திக் ராஜா!

செம்பருத்தி சீரியலின் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜா இந்த ஆண்டு பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல கவனம் பெற்ற மெகா தொடர் செம்பருத்தி. இதில் நடித்த கார்த்திக்குக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதே போல அவர் நடித்த ஆபிஸ் சீரியலும் நல்ல கவனம் பெற்றது. இந்நிலையில் அவர் திடீரென்று அந்த செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் கிரவ்ட் பண்டிங் மூலமாக இப்போது ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் உள்ளார். இந்நிலையில் அவரை எப்படியாவது பிக்பாஸ் சீசன் 5 ல் கொண்டு வந்துவிட வேண்டுமென முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.