கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!
தற்போதைய காலகட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு இணையான பிரபலத்தை சமூகவலைதளப் பிரபலங்கள் பெற்று வருகின்றனர். அப்படி பிரபலமாகும் சமூகவலைதள பிரபலங்கள் அடுத்த கட்டமாக சினிமாவில் கால்பதிக்கின்றனர். அது பரிதாபங்கள் கோபி, சுதாகர் தொடங்கி பலரை உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் வி ஜே சித்து.
சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டிராகன் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை வேடத்தில் அவர் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதையடுத்து தற்போது அவர் கதாநாயகனாக ப்ரமோஷன் பெறுகிறார்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க வுள்ள படத்தில் கதாநாயகனாக அறிமுகமாவதோடு மட்டுமில்லாமல், அவரே அந்த படத்தை இயக்கவும் உள்ளாராம். இதற்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் அவரை வைத்து ப்ரோமோ ஷூட் ஒன்றை படக்குழு படமாக்கியுள்ளது.