1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (09:54 IST)

அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்கும் பிக்பாஸ்!

பிக்பாஸ் சீசன் 5 க்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். நான்கு சீசன்கள் கடந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.


கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் கமல் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவார் என சொல்லப்படுகிறது.