தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் பிரம்மாண்டமாக நடக்கும் விருமன் இசை வெளியீடு… கலந்துகொள்ளும் பிரபலங்கள்
- பொன்னி நதி பாக்கணுமே… ஏ.ஆர்.ரஹ்மானால் அப்செட் ஆன ஃபேன்ஸ்!
- சிவகார்த்திகேயனுக்காக கொக்கி போட்ட நெல்சன்… நாசூக்காக மறுத்த ரஜினி?
- ஜிகர்தண்டா -2 பட முக்கிய அப்டேட்!
- கர்நாடகாவில் தொடங்கிய பத்து தல படப்பிடிப்பு… வைரல் புகைப்படம்!
பொன்னி நதி பாடல் வெளியீட்டில் கலந்துகொள்ளாத விக்ரம்… தொடரும் சர்ச்சை!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டில் விக்ரம் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான பொன்னி நதி பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த நிகழ்வில் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் படத்தின் நாயகர்களில் ஒருவரான விக்ரம் கலந்துகொள்ளாதது ஏன் என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படக்குழு மேல் விக்ரம் அதிருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
