பெங்களூரில் ஜனநாயகன் படத்தை தாங்களாகவே நிறுத்திய தியேட்டர் ஓனர்கள்.. இதுதான் காரணம்...
கர்நாடகாவில் காவிரி நீரை தமிழகத்திற்கு திறக்கக் கோரி நிலவி வரும் பிரச்சனை காரணமாக, நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 23 அன்று வெளியான 'ஜன நாயகன்' திரைப்படத்தின் திரையரங்க காட்சிகள் அங்கு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதை கண்டித்து கன்னட அமைப்புகளும் விவசாயிகளும் தீவிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, பெங்களூரு ஊர்வசி திரையரங்கம் உள்ளிட்ட பல இடங்களில் விஜய்யின் போஸ்டர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டன. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்க்கும் பொருட்டு, தியேட்டர் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து காட்சிகளை ரத்து செய்ததுடன், சில இடங்களில் கன்னட படங்களை மாற்று திரையிடலாக மாற்றியுள்ளனர். மேலும், பாதுகாப்புக்காக பல திரையரங்குகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பேச கர்நாடக திரைப்பட வணிகச் சபையும் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
Edited by Siva
