செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:16 IST)

துருவ நட்சத்திரத்தை முடிக்க விக்ரம் எடுத்த முயற்சி!

நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தினை ரிலீஸ் செய்ய விக்ரம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியாமல் பணப்பிரச்சனைகளில் சிக்கியுள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கௌதம் மேனன். இப்போது விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரம்முடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் பற்றிய முக்கிய அப்டேட்டை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த இன்ஸ்டாகிராம் உரையாடல் ஒன்றில் அதை அவர் வெளியிட்டுள்ளார். கௌதம் மேனன் தயாரித்த நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் நரகாசூரன் ஆகிய படங்களும் ரிலிஸாகாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கௌதம் மேனன் மேல் விக்ரம் கடுமையான கோபத்தில் இருந்தார். ஆனால் இப்போது படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் விக்ரம். இதையடுத்து பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் பணிகளை மேற்கொள்ள உள்ளாராம்.