ரஜினி மறுத்த கதையில் விக்ரம்… ஆனாலும் இன்னும் ரிலீஸாகாத சோகம்!
இயக்குனர் கௌதம் மேனன் தான் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படக்கதையை முதலில் ரஜினிக்குதான் சொன்னாராம்.
ரஜினி தன்னுடைய திரைவாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என நினைத்து புதிய தலைமுறை இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்த முதல் படம் கபாலி. அப்போது அவர் பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். அதில் ஒருவர்தான் கௌதம் மேனன். அப்போது அவர் ரஜினிக்கு துருவ நட்சத்திரம் கதையைதான் சொன்னாராம்.
கிட்டத்தட்ட அந்த படம் உறுதியான நிலையில் திடீரென்று தயாரிப்பாளர் தாணு போன் செய்து அந்த படம் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். அதன் பின்னர்தான் ரஜினி கபாலி படத்தில் நடித்தார். அதன் பின்னர் கௌதம் துருவ நட்சத்திரம் கதையை விக்ரமை வைத்து இயக்கினார். அந்த படம் நீண்ட நாட்களாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை.