வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:19 IST)

ஒரே நாளில் ரிலிஸாகும் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள்!

நடிகர் விஜய் சேதுபதியின் குட்டி லவ் ஸ்டோரி மற்றும் உப்பேன்னா ஆகிய படங்கள் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளன.

கொரோனா காலத்தில் சினிமாவில் உருவான பெரும் மாற்றங்களில் ஒன்றாக ஆந்தாலஜி எனும் வகைமை தமிழ் சினிமாவில் அதிகமாகியுள்ளது. ஒரே வகையான மையக்கருவை வைத்துக்கொண்டு நான்கு அல்லது ஐந்து குறும்படங்களை எடுத்து அதை ஒரே படமாக வெளியிடுவது ஆந்தாலஜி எனப்படுகிறது.

இந்த வகையில் தமிழில் புத்தம் புதுக் காலை மற்றும் பாவக்கதைகள் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இப்போது விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள குட்டி லவ் ஸ்டோரி எனும் ஆந்தாலஜி திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் நடித்துள்ள ஹலோ ஹலோ திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தொகுப்பு பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதே நாளில் விஜய் சேதுபதி கொடூரமான வில்லனாக நடித்துள்ள தெலுன்குப் படமான உப்பேன்னா வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. விஜய் சேதுபதியின் மார்க்கெட் இப்போது தெலுங்கில் கணிசமாக உயர்ந்துள்ளதால் இந்த படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.