1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (15:17 IST)

லோகேஷைக் கண்டுகொள்ளாத கமல்… விஜய்சேதுபதியுடன் கூட்டணியா?

கமல் நடிப்பில் லோகேஷ் இயக்குவதாக இருந்த படத்துக்கான எந்த முன்னேற்றமும் தெரியவில்லையாம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.

இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்த நிலையில் கமல் தேர்தலுக்கு முன்னர் இந்த படத்தில் நடித்து முடிப்பதாக இருந்தார். ஆனால் இப்போது கமலிடம் இருந்து எந்த அழைப்பும் லோகேஷுக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் கமல் தேர்தல் முடிந்து படத்தைத் தொடங்கலாம் என சொல்லிவிட்டால் அந்த இடைவெளியில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை எடுக்கும் முனைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.