வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (10:47 IST)

விஜய் சேதுபதியை வானளாவ புகழ்ந்த மெகா ஸ்டார்!

விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்துள்ள உப்பேன்னா படத்தின் விழாவில் சிரஞ்சீவி அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பல இடங்களில் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்தார். இதனால் விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் புகழ்பாட தொடங்கினர். இந்நிலையில் தமிழைத் தவிர பல மொழிகளில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அப்படி அவர் தெலுங்கில் வில்லனாக நடிக்க ஓப்புக்கொண்ட திரைப்படம்தான் உப்பேன்னா. ஆணவக் கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறதாம். இந்த படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. பஞ்சா வைஷ்ணவ தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இப்படத்தை புச்சி பாபு சனா எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிரஞ்சீவி ‘விஜய் சேதுபதி இந்த தலைமுறையின் மிகச்சிறந்த நடிகர். சமீபத்தில் அவர் மாஸ்டர் படத்தில் நடித்த பவானி கதாபாத்திரம் மிகச்சிறப்பாக இருந்தது. மிகப்பெரிய ஹீரோவாக இருந்துகொண்டு அவர் வில்லனாகவோ குணச்சித்திர கதாபாத்திரத்திலோ நடிக்க கொஞ்சம் கூட தயங்குவதில்லை. அவருக்கு ஜார்ஜியோவில் கூட ரசிகர்கள் இருக்கின்றனர்’ எனக் கூறியுள்ளார்.