திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (11:13 IST)

விஜய் சேதுபதி சாதாரண ஆள் இல்ல... மகாநடிகன் : பிரம்மித்த ரஜினி காந்த்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா உள்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் பேட்ட.



அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  பொங்கலுக்கு உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சமுத்திரகனி தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
 
இந்த விழாவில் பேசிய ரஜினி, 
 கஜா புயலால் உயிரிழந்து, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் தருணம் இது. கஜா புயல் மிகப்பெரிய பேரழிவு அரசாங்கத்தால் மட்டும் அதனை சரிசெய்ய முடியாது. நாம் எல்லோரும் கரம்கோப்போம் என்றார்.  பேட்ட படம் குறித்து ரஜினி பேசுகையில், 
 
கார்த்திக் சுப்புராஜ் என்னுடைய மிகப்பெரிய ரசிகர். எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணி இருந்தார். வில்லன் யாருன்னு அவருகிட்ட கேட்டேன், விஜய் சேதுபதின்னு கார்த்தி சொன்னார். எனக்குச் சந்தேகம் எப்படினு கேட்டேன். நான் பார்த்துக்கிறேன் சார்னு கார்த்தி சொன்னார். அதுக்கப்புறம் விஜய் சேதுபதி ஓ.கே சொல்லிட்டாருன்னு சொன்னார். விஜய் சேதுபதியோடு படம் பார்த்திருக்கிறேன். அவருடன் பழகிய பின்னர்தான் தெரிந்தது. அவர் சாதாரண நடிகன் இல்லை. அவர் ஒரு மகா நடிகன். நல்ல மனிதர், பொறுமையான மனிதர். பேச்சு, சிந்தனை, கற்பனை வித்தியாசமானது. ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம். 
 
பிளாஷ்பேக் கதாநாயகியான திரிஷா நடிச்சிருக்காங்க. அந்த கதாபாத்திரம் பண்ண திரிஷாவே தயாராக இருந்தார். சிம்ரனுடன் டூயட் பாடும் போது கூச்சமாக இருந்தது. சசிகுமாரின் கதாப்பாத்திரம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சிறப்பாக இருக்கும்படியான கதாப்பாத்திரம். சசிகுமார் ஒரு மீசை வைத்த குழந்தை. அவர் படத்தை தயாரிக்காம நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.