சூப்பர் ஸ்டாரின் நடிப்பை யாராலும் நடிக்க முடியாது: 'பேட்ட' ஆடியோ விழாவில் பாபிசிம்ஹா

Last Modified ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (18:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், கார்த்திக் சுப்புராஜ், அனிருத், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் முதல் நபராக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பாபிசிம்ஹா பேசியுள்ளார். அவர் மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாமலை' படத்தின் வசனம் ஒன்றை பேசி முடித்துவிட்டு, 'இந்த வசனத்தை வழக்கம்போல் சொதப்பிவிட்டேன். ரஜினிகாந்த் நடிப்பை அவரை தவிர வேறு யாராலும் கொண்டு வர முடியாது' என்று கூறினார்.


மேலும் சூப்பர் ஸ்டார் வில்லனாக நடித்தாலும் ஹீரோவாக நடித்தாலும் ஏன் அவர் ஸ்க்ரீனில் தோன்றினாலே போதும் நான் மட்டுமல்ல, கோடிக்கணக்கான அவரது ரசிகர்களும் ரசிப்பார்கள் என்று பாபிசிம்ஹா கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :