திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (16:20 IST)

இளமை ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா! உறுதி செய்த டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் 'பேட்ட' படத்தில் இளமை, முதுமை என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இரண்டும் ஒருவரா? அல்லது இரண்டு வேடமா? என்பது படம் பார்த்த பின்னர்தான் தெரியவரும்

இந்த நிலையில் இந்த படத்தில் த்ரிஷா, சிம்ரன் ஆகிய இரண்டு ஹீரோயின்கள் இருப்பதால் இதில் யார் இளமை ரஜினிக்கு ஜோடி, யார் முதுமை ரஜினிக்கு ஜோடி என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் த்ரிஷா தன்னுடைய டுவிட்டரில் 'பேட்ட' படத்தின் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இளமை ரஜினியுடன் ரோமன்ஸ் மூடில் த்ரிஷா இருப்பதால், த்ரிஷாதான் இளமை ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது உறுதியாகிறது.

மேலும் அந்த டுவீட்டில் 'தன்னுடைய வாழ்நாள் கனவு நனவாகிவிட்டதாகவும், ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாருடன் நடித்துவிட்டேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.