மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம், ஏப்ரல் 24ஆம் தேதி உலகளாவிய அளவில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி பரவியது.
சுந்தர் சி மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் காமெடி கூட்டணியில் பல வெற்றிப் படங்களை வந்துள்ள நிலையில் மீண்டும் இப்போது அந்த கூட்டணி கேங்கர்ஸ் படத்தில் இணைந்திருப்பதால், படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
மேலும் கேத்ரின் தெரசாவின் கிளாமர், சுந்தர் சியின் சுவாரஸ்யமான காமெடி நடிப்பு போன்றவை, இந்த இரண்டு நிமிடங்களுக்கு மேலான டிரைலரில் ஒரு சிரிப்பு வெள்ளம் கிளப்பும் காட்சிகளாக காணப்படுகிறது.
சத்யா இசை, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு, பிரவீன் படத்தொகுப்பு ஆகியவற்றுடன் உருவாகியுள்ள இந்த படம், முழுக்க முழுக்க காமெடி, என்டர்டெயின்மென்ட் கலந்த ஒரு அனுபவமாக அமையும் என்பதை டிரைலர் தெரிவிக்கின்றது. எனவே, சுந்தர் சி, கேங்கர்ஸ் படத்தின் மூலம் இன்னொரு வெற்றியை எடுப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.