செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 10 டிசம்பர் 2018 (11:11 IST)

பெரிய ஆளை எதிர்த்தால் பெரிய ஆளாக முடியும்: ரஜினி முன்னிலையில் விஜய் சேதுபதி பேச்சு

பேட்ட பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ரஜினி சார்,  தன்னுடைய நடிப்பால் எதிரில் உள்ளவர்களை தூக்கி சாப்பிட்டு விடுவார்.



அதை எதிரில் உள்ளவர்களால் கண்டு பிடிக்க முடியாது. இவ்வளவு நடிச்சா போதும். என்று  சில படங்களில் நடிச்ச எனக்கே தோன்றுகிறது. ஆனால் ரஜினி சார் இந்த வயதிலும், டைரக்டர் சார், இப்படி பண்ணவா, அப்படி பண்ணவா என்று கேட்டு கேட்டு, ரெம்ப மெனக்கெட்டு  முழு திறனையும் வெளிப்படுத்துவார். இதை பார்த்து மிரண்டு விட்டேன்.  பேட்ட படத்தில் நான் வில்லனாகத்தான் நடித்துள்ளேன். பெரிய ஆளை எதிர்த்தால் தான், பெரிய ஆளாக வர முடியும். எனவே ரஜினி சாருக்கு நான் வில்லன் தான் என்றார்.