வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (16:55 IST)

'பேட்ட' இசை வெளியீட்டுக்கு அட்டகாசமான மேடை தயார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருவதால் தினமும் டுவிட்டர் டிரெண்டில் பேட்ட திரைப்படம் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு 'பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்காக வண்ணமயமான அட்டகாசமான மேடை தயாராகி உள்ளது.

இன்னும் சில நிமிடங்களில் முக்கிய விருந்தினர்களின் வருகை தொடங்கிவிடும் என கருதப்படுகிறது. ரஜினிகாந்த், கலாநிதி மாறன், கார்த்திக் சுப்புராஜ், த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, அனிருத் உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.