வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (11:03 IST)

ரஜினியின் நடனத்தை வெகுவாக புகழ்ந்த சசிகுமார்!

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், "ரஜினி சாரை படத்தின் முதல் நாள் திரையில்   பார்த்து வியந்தவன் நான். அவருடனே இப்போது நடித்துள்ளதை பெருமையாக கருதுகிறேன்.



ரஜினி சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப எளிமையாக நடந்து கொள்வார்.  கேரவன் என்று இல்லை, எஙகு வேண்டுமானாலும் உடை மாற்றுவார். நடனம் தனக்கு பெரியதாக வராது என ரஜினி சார் சொல்வார். ஆனால் உண்மையில் அவர் திறமையாக நடனம் ஆடக்கூடியவர். நள்ளிரவு 2 மணி அளவில் பேட்ட படத்தின் ஒரு பாடலுக்கு ஷூட்டிங் நடந்தது. அந்த நேரத்தில் அற்புதமாக நடனம் ஆடினார். 
 
ரஜினி சார், இன்னும் நீங்கள் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் அதுவே எங்கள் ஆசை" என்றார். இறுதியில் தளபதி படத்தில் ரஜினி பேசும் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற வசனத்தை பேசிவிட்டு அமர்ந்தார்.