ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (22:45 IST)

’தளபதி 64’ படத்தில் இணைந்த விஜய் நண்பர்கள்!

விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘தளபதி 64’ படத்தில் விஜய்யின் நண்பரும் தீவிர ரசிகருமான சாந்தனு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்யின் நண்பர்கள் சிலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

விஜய் சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே நண்பர்களாக இருந்தவர் சஞ்சீவ். தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். அதேபோல் விஜய்யுடன் ஆரம்பகாலத்தில் நண்பர்களாக உடன் நடித்தவர்கள் ஸ்ரீமான், ஸ்ரீநாத் ஆகியோர்கள் என்பது தெரிந்ததே. தற்போது சஞ்சீவ், ஸ்ரீமான், ஸ்ரீநாத் ஆகிய மூவரும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த தகவலை உறுதி செய்வது போல் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இந்த மூவரும் இருக்கும் ஸ்டில் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே ‘தளபதி 64’ படத்தின் தயாரிப்பாளர் விஜய் குடும்பத்திற்கு நெருக்கமானவர் மற்றும் உறவினர் ஆவார். அதனையடுத்து விஜய்க்கு நெருக்கமான நண்பர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படம் விஜய்க்கு ரொம்பவே ஸ்பெஷல் படம் என கருதப்படுகிறது