திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (11:30 IST)

துவங்கியது விஜய் பட ஷூட்டிங்: டிரெண்டாகும் #Thalapathy64Pooja!!

விஜய் நடிக்கவுள்ள தளபதி 64 படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. ரசிகர்கள் ஐதை கொண்டாடி வருகின்றனர். 
 
தளபதி விஜய் நடிக்க உள்ள 64 வது திரைப்படமான தளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூட்டிங் இன்று துவங்கியுள்ளது.
 
தளபதி 64 படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை மிகப் பெரும் செய்தியாக இருந்த நிலையில், அதனை அடுத்து இந்த படத்தில் அந்தோணி வர்கீஸ், சாந்தனு மற்றும் மாளவிகா மேனன் ஆகியோர் நடிக்க இருப்பதாக வெளிவந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் மீண்டும் விஜய் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று படத்தின் பூஜை என்பதால் விஜய் ரசிகர்கள் #Thalapathy64Pooja என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பான திரில்லர் கதையைக் கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை குறைந்த நாட்களில் படமாக்கி வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.