செவ்வாய், 1 ஏப்ரல் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (09:35 IST)

ஈட்டி இயக்குனரின் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கும் விஷால்.. கதாநாயகி இவர்தான்!

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதனால் தொடர் தோல்விகளால் அவதிப்பட்டு வந்த விஷாலுக்கு ஒரு பிரேக் கிடைத்துள்ளது. ஆனாலும் விஷால் இன்னும் தன் அடுத்த படத்தைத் தொடங்கவில்லை. சுந்தர் சி உடன் அவர் இணைந்து பணியாற்ற இருந்த படம் தற்போதைக்குக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதே போல கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடிக்க இருந்த படமும் தாமதம் ஆகியுள்ளது.

இந்நிலையில் அவர் ஈட்டி என்ற படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிப்பதோடு அல்லாமல் அவரே தயாரிக்கவும் உள்ளாராம். கடந்த சில ஆண்டுகளாக விஷால் படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.