செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (21:07 IST)

என் பெயரைக் கெடுக்க நினைக்கிறார்கள் - நடிகர் விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் !

தமிழகத்தில் எங்கே அராஜகம் நடந்தாலும்  அங்கே ஆஜராகி நியாயம் பெற வேண்டி போராடி வருபவர் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. இவரது சமூக செயல்களை அடிப்படையாக வைத்து டிராபிக் ராமசாமி என்ற படத்தை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி நடித்திருந்தார். 
இப்படத்திற்காக,  ரூ.21 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பு ஏற்படுத்தியது.
 
டிராபிக் ராமசாமி என்ற படத்தின் தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை ரூ. 3 கோடிக்கு அளிப்பதாக உறுதி அளித்து, தமிழகத்தைச் சேர்ந்தவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான சுப்பிரமணியன் என்பவரிடம் ரூ. 21 லட்சத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு எஸ்.ஏ.சி ஒரு ஒப்பந்தம் போட்டதாகத் தெரிகிறது.
 
இதனைத்தொடர்ந்து, 'டிராபிக் ராமசாமி' படத்தை எஸ்.ஏ.சி சில நாட்கள் கழித்து வெளியிட போவதால், சுப்பிரமணியனிடம் பெற்ற பணத்தை திரும்பித் தருவதாக கூறிய பிறகும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். பின்னர் தான் கொடுத்த பணத்தை சுப்பிரமணியம் எஸ்.ஏ.சியிடம் கேட்டுள்ளார். இதற்கு இரு தரப்பிலும் வாக்குவாதம் ஆனதாக  தெரிகிறது. 
 
இந்நிலையில் எஸ்.ஏ.சி சந்திரசேகரின் கிரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதில், டிராபிக் ராமசாமி படம் 2018 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சியின் தயாரிப்பில் உருவானது. இந்த படத்தை தமிழ் நாட்டில் வெளியிடும் உரிமையை பிரமானந்த் சுப்பிரமணியன் பெற்றிருந்தார்.இதற்காக வேண்டி ரூ. 20 லட்சம் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால் அந்தப் பணத்தை அவரால் கொடுக்க முடியவில்லை.  இதனையடுத்து, சில தினங்கள் கழித்து படம் வேண்டாம் என்றார். அதனால் வியாபாரம் சம்பந்தமாக முடிவு எடுக்க முடியாமல் போனது.

அந்த கடைசி நேரத்தில் வேறு விநியோகஸ்தர்களுக்கு படத்தை விற்றால் பணத்தை கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் அப்போது யாரும் படத்தை வாங்க வரவில்லை. அதனால் எஸ்.ஏ.சி படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டார்.இதனால் அவருக்கு கோடிக்கணக்கில் நஷ்டன் ஏற்பட்டது.இந்நிலையில் இப்படத்தை வாங்கவிம் இல்மால் வெளியிடவும் இல்லாமல் எந்த சம்பந்தமும்மில்லாத மணிமாறன் போலீஸ் கமிசனர் அலுவகத்தில் புக்கார் அளித்துள்ளார். 
 
இந்த புகார் எஸ்.ஏசியிக்கு மன உளைச்சலை உண்டாக்க வேண்டும் என்று தரப்பட்டுள்ளது.மேலும், கமிஷனர் அலுவலத்தில் எஸ்.ஏ.சி கூறியதாவது : எனது பெயரை கெடுக்கவே இந்தப் புகார் கூறியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.